ஜோதிடம் மக்களை தெளிவுக்கு இட்டுச்செல்ல வேண்டுமே ஒழிய குழப்பத்திற்கு அல்ல. ஆனால் உண்மையில் இன்று என்ன நடக்கிறது?
தங்களை தேடி வரும் மக்களுக்கு சில ஜோதிடர்கள், தோஷங்களின் பெயரில் மேலும் அதிக பயத்தை தந்துவிடுகின்றனர் இது
ஏற்கனவே கவலைப்படுபவர்களுக்கு முடிவற்ற பயத்தை உருவாக்குகிறது. ஜோதிடரின் நோக்கத்தை குறைகூறவில்லை.ஆனால் அவர்கள் தீர்வுக்கு பயன்படுத்தும் முறை அடிப்படையில் எதிர்மறையானதாகவே இருக்கிறது.