முதன் முதலில் மூன்று ஆண்டிற்கு முன் பல மருத்துவ முறைகளை கையாண்டும் கருத்தரிக்காமல் மிகவும் வேதனையோடு என்னை அணுகினார் அவர். அவரின் மனைவியின் முகம் வாடியிருந்தது. குழந்தை பிறக்கவில்லை என்ற சமூக அழுத்தம் மிகவும் வாட்டிக்கொண்டிருந்தது. மேலும் தொடர் மருத்துவத்தால் ஏற்பட்ட உடல் சோர்வும் அவரை தடுமாற வைத்திருந்தது. பொருட்செலவும் அதனாலான பொருளாதார நெருக்கடியும் கூடுதல் சுமை.