Published by Thiru on May 3, 2020 உங்க மனசுல இந்த மாதிரி கேள்வியிருந்தா கீழ நான் சொல்ற என்னால மறக்க முடியாத சம்பவத்தை கண்டிப்பா படிச்சி பாருங்க. உங்களுக்கு பல பதில் கிடைக்கலாம்.சில மாதங்களுக்கு முன்ன ஒரு அம்மா தன் ஏழு-எட்டு வயசு பையனுக்கு ஜாதகம் பார்க்க வந்தாங்க. பேச்சு செயல் எல்லாத்துலையும் அதிகாரமும் ஆணவமும் தலைக்கேறி நடந்துகிட்டாங்க. என் நண்பனுடைய உறவினர்ங்கிறதாலயும் ஏற்கனவே பரீட்சயங்கிறதாலையும் எதையும் பெருசா கண்டுகல.