Published by Thiru on May 3, 2020 இன்றுடன் ராம்கோவில் இருந்து வேலையை விட்டு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி அமைத்த நாள். நானும் இந்த பத்தாண்டில் பல நூறு மனிதர்களுடன் பல நூறு வாழ்க்கையை வாழ்ந்தாயிற்று.கடந்த காலத்தை அடுத்த கட்ட பயணிதிற்கான பரிசோதனைகளின் கூட்டாகவே பார்க்கிறேன். பல தோல்விகள் அடைந்திருக்கிறேன். பல முக்கியமான வெற்றிகளையும் அடைந்திருக்கிறேன்.அடுத்த பத்தாண்டுகளுக்கான பார்வை தெளிவாக இருக்கிறது. பயணித்தால் தான் தெரியும். இனியும் தோல்விகள் வரலாம். தனிபட்ட வாழ்க்கையில் தடுமாற்றம் இருக்கலாம் ஆனால் வெறுமை வராது.