நம்ம மக்கள் ரொம்ப overa தான் போறாங்க :). மாசம் 480 பேர் கூகுள்ல How to make ketu happy ன்னு தேட்றாங்க.. ன்னு இன்னைக்கு தான் பார்த்தேன்..கேது என்ன மனுஷனா மாடா..
பாரம்பரிய ஜோதிடத்த ஒழுங்கா புரிஞ்சிக்காத பலர் கேது வை பிரச்சனை கொடுக்குற கிரகம்னு மக்களுக்கு பயத்தை உருவாக்கி வெச்சிருக்காங்க.கேது திசையில கல்யாணமே பண்ணக்கூடாதுன்னு முட்டாள் தனத்தை எல்லாம் வேற எல்லார் மனசுலையும் விதைக்கிறாங்க.இது ரொம்ப தப்புங்க my son.
நான் பலமுறை சொல்லியிருக்கேன்.கேது பிரச்சனையை கொடுக்கிற கிரகம் அல்ல. தீர்வை கொடுக்கிற கிரகம்.கேது ஞானத்துக்கான கிரகம்.கேது ஜோதிடம் மனோதத்துவம் ஆராய்ச்சிகளுக்கு தொடர்பான கிரகம்.
பிற மனிதர்களை எந்த முன்தீர்மானமும் இல்லாமல் முழுசா புரிஞ்சிக்க வைக்கிற தன்மையை நமக்கு கேது தான் தருது. கேது தான் democracy உடைய அடிப்படை. அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை.
கேது தான் உண்மை. கேது தான் பேராணந்தம். கேது நல்லாயிருக்கிறவங்க உண்மையை தேடிட்டே இருப்பாங்க. அதுக்காக கஷ்டம் தான் படனும்னு அவசியம் இல்லை.அதனால கேதுவை சந்தோஷப்படுத்த எல்லாம் வேண்டாம். நம்மதியா இருங்க மக்களே..
கேது வை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ இருக்கிற வீடியோவை பாருங்க..நன்றி