Guys Vs Girls
Popular belief vs TIME SCIENCE Facts
Popular Belief 1 : பெண்கள் மட்டும் தன்னை அழகாக்கி கொள்ள விரும்புவார்கள்.
ஆணோ பெண்ணோ குழந்தைகளோ சுக்கிரன் பலமாக பிறந்திருந்தால் கண்டிப்பாக அழகு ( Make Up ) செய்துகொள்ள விரும்புவார்கள்.பெண்களாக இருந்தாலும் கேது பலமாக இருந்து சுக்கிரன் தொடர்வு இல்லையென்றால் தலை சீவக்கூடபிடிக்காது. ( தமிழிசை அக்கா. )
உங்கள் குழந்தை தலைசீவ விடவில்லை என்றால் கேது பலம் உள்ளது என்று அர்த்தம். உங்கள் குழந்தையை புரிந்து கொள்ளுங்கள்.தயவு செய்து அதற்காக அடிக்காதீர்கள்.
Popular Belief 2 : ஆண்கள் மட்டுமே செலவு செய்வார்கள்
சூரியன் பலமாக இருந்தால் ஆணோ பெண்ணோ இருவருக்குமே தலைமைப்பண்பு இருக்கும். அவர்கள் தான் செலவு செய்வார்கள். ஆணாக பிறந்து தலைமை பொறுப்பபை எடுத்துக்கொள்ளாதவர்களும் உண்டு. ( சந்திரன் ).
Popular Belief 3 : பெண்கள் மட்டும் தான் அதிகம் பேசுவார்கள்
இரண்டாம் பாவத்தில் ராகு இருந்தால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குழந்தையாக இருந்தாலும் வாயை திறந்தால் நிப்பாட்ட மாட்டார்கள்.இரண்டாம் பாவதில் சனி உள்ள ஆணோ பெண்ணோ குழந்தையோ முடிந்தவரை பேசமாட்டார்கள்.அமைதிதான்.
Popular Belief 4 : ஆண்கள் மட்டும் தான் வேலைக்கு போக விரும்புவார்கள். பெண்கள் வீட்டில் இருக்கவே விரும்புவார்கள்
6ம் பாவம் வலுத்திருக்கும் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் வேலைக்குச்செல்லவே விரும்புவார்கள்.திருமணத்திற்கு பின் வேலைக்கு போகக்கூடாது என்று கூறி திருமணம் செய்வது மிகத்தவறானது. திருமணம் யாரையும் அழிக்கக்கூடாது. இருவரும் அவர் அவர் வாழ்க்கையை நிறைவாக வாழவே திருமணம். ஒருவரை அழித்து ஒருவர் வாழ்வது மடத்தனம்.
அதே சமயம் 5ம் பாவம் வலுத்திருந்தாலோ பத்தாம் பாவம் வலுத்திருந்தாலோ ஆணோ பெண்ணோ வேலைக்குப்போக விரும்பமாட்டார்கள். ஆனால் சுயமாக ஏதேனும் தொழில் செய்ய விழைவார்கள். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு தரப்படவேண்டும்.வேலைக்குச்செல்வது தான் பாதுகாப்பு என்று அவர்களை கட்டாயப்படுத்தினால் அவர்கள் வாழ்க்கையை அழிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
Popular Belief 5 : பெண்களுக்கு தான் குழந்தையை வளர்க்கத்தெரியும்
குரு பலம் இருந்தால் ஆணோ பெண்ணோ குழந்தையை வளர்க்கத்தெரிந்தவர்கள் ஆகிறார்கள். பெண்கள் மட்டும் குழந்தை வளர்க்கத்தெரிந்தவர். பெண்கள் தான் குழந்தையை வளர்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது. குழந்தையை வளர்க்கத்தெரியாத பெண்களும் உண்டு. குழந்தையை நன்றாக வளர்க்கத்தெரிந்த ஆண்களும் உண்டு. அவர்கள் தான் அந்த பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.
யார் வளர்த்தாலும் குழந்தையை முழுவதும் புரிந்துகொண்டு அதை அதன் போக்கில் வளரவிடவேண்டும். நீர் ஊற்ற மட்டுமே வேண்டும். பூ பூப்பது இயல்பாக நடக்கவேண்டும்.
Popular Belief 6 : ஆண்களுக்கு மட்டுமே காமம் குறித்து பேச பிடிக்கும்
இரண்டாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஆணோ பெண்ணோ இருவருக்குமே காமம் குறித்து பேச பிடிக்கும். அதுவே குரு பலத்தோடு பிறந்தால் அப்படி பேசுவது தவறு என்றும் அது தனக்கு பிடிக்கிறதே ஏன் என்றும் குற்ற உணர்வுக்குள் செல்வார்கள்.
Popular Belief 7 : பெண்களுக்கு மட்டுமே வெட்கம் வரும்
சந்திரன் பலமுள்ள யாருக்கும் வெட்கம் வரும். வெட்கம் பெண்களுக்கு மட்டமானது அல்ல. சந்திரன் பலம் உள்ளவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னை புரிந்துகொண்டு தனக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அதிகபட்சம் அவர்கள் விருப்பத்தை ஒரே ஒரு முறை தான் சொல்வார்கள். அதற்கு மேல் நீங்கள் செய்யவில்லை என்றால் அவர்கள் பயங்கரமாக துடித்துப்போவார்கள். ஆனால் அதை வெளிக்காட்டவும் மாட்டார்கள்.
Popular Belief 8 : ஆண்கள் தான் காதலை முதலில் சொல்லவேண்டும்
பெரும்பாண்மை உண்மை என்றாலும் சூரியன் பலமுள்ள பெண் தானாகவே காதலை கூற நினைப்பாள். அதற்கு இந்த சமூகம் தான் மிகப்பெரிய தடையாக இருக்கும்.
Popular Belief 9 : பெண்கள் தான் சோற்றுக்கு அலைவார்கள்
ராகு சிறப்பாக இருந்தால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சோறு தான் முக்கியம்.
சாப்பிடத்தெரிந்தவர்களுக்கு சமைக்கத்தெரியவேண்டிய அவசியமில்லை.
Popular Belief 10: ஆண்கள் அழமாட்டார்கள்
2ல் சந்திரன் உள்ள ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நிறைய அழுவார்கள். எதற்கெடுத்தாலும் அழுவார்கள்.