எழுத்தின் கிரகம் என்ன?
ஒலி என்பது காதால் கேட்பது.ஸப்தம் , இசை மற்றும் மொழி அனைத்தும் அடிப்படையில் ஒலி.கண்களை மூடினாலும் அவற்றை உணரமுடியும்.ஆனால் எழுத்து ஒலி அல்ல.எழுத்து ஒளி வடிவம். கண்களால் பார்ப்பது. கண்களை மூடிவிட்டால் எழுத்து தெரியாது.
கண்களால் பார்க்கப்படுவது சுக்கிரன்
காதுகளால் கேட்கப்படுவது புதன்
எழுத்து என்பது மொழியின் வரி வடிவம்.அதாவது ஒலியின் ஒளி வடிவம்.எழுத்தை பார்க்க கண்கள் வேண்டும்.அதே சமயம் ஒரு எழுத்து என்ன சொல்கிறது என்பதை அர்த்தப்படுத்த மொழியின் அறிவு வேண்டும்.
எழுத்து என்பது அடிப்படையில் ஓவியம்.ஓவியம் என்பது சுக்கிரன்.ஓவியத்திற்கு ஒரு அர்த்தம் தருவது புதன்.மொழியின் எழுத்து – சுக்கிரன் + புதன்.
ஓவியத்தை பார்க்க அறிவு தேவையில்லை. ஆனால் எழுத்தை புரிந்து கொள்ள (மொழி ) அறிவு தேவை.
ஓவியத்தை பார்ப்போம். எழுத்தை படிப்போம். எழுத்து என்று வரும் பொழுது மூளைக்கு வேலை தருகிறோம்.
எழுத்தை புதன் + சுக்கிரன் என்று வரையறுக்கும் பொழுது அழகான கையெழுத்துள்ள எழுத்து என்று வந்துவிடும்.
அதாவது சுக்கிரனும் புதனும் சேர்ந்திருந்தால் கையெழுத்து அழகாக இருக்கும். ஆனால் எழுத்தின் முக்கியத்துவம் அதன் வார்த்தையில் அர்த்தத்தில் உள்ளதே ஒழிய அழகில் இல்லை.
அதாவது எழுத்தை எழுத ஓவியம் வரையும் கலை அவசியம் இல்லை.அதனால் தான் Practically புதனை மட்டுமே எழுத்துக்கு எடுத்துக்கொள்கிறோம். அழகாக எழுதினாலும் அழகில்லாமல் எழுதினாலும் எழுத்தை மொழியை புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு மாணவனை அழகாக எழுதினால் தான் மதிப்பெண் தருவேன் என்று ஒரு ஆசிரியர் கூறினால், அந்த மாணவன் மீது எந்த பிழையும் இல்லை. அந்த ஆசிரியர் முட்டள் என்று உணர்க. வரையத்தெரிந்தவன் அழகாக எழுதுவான். மற்றவர்களால் முடியாது. அதை கட்டாயப்படுத்துவது அதற்காக மாணவனுக்கு தாழ்வு மனப்பாண்மை தருவது கண்டிக்கத்தக்கது.
நமக்கு குறைந்த பட்ச அறிவு இருப்பதால் புதனை மட்டும் எழுத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். சுக்கிரன் option ஆக வைத்துக்கொள்ளலாம்.
அதாவது
எழுத்து = புதன் ( + சுக்கிரன் )
எழுத்தாளனின் கிரகம் என்ன?
எழுத்தாளனுக்கும் கையெழுத்து அழகாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதானல் அவனுக்கும் சுக்கிரன் தேவையில்லை. புதன் மட்டும் போதும்.
எழுத்து – புதன் ( + சுக்கிரன் )
எழுத்தாளன் – புதன் (+ சுக்கிரன்)
உண்மையில் எழுதுபவன் எல்லாம் எழுத்தாளன் கிடையாது. எழுத்தின் வழியே ஒரு உண்மையை கடத்துபவனே எழுத்தாளன். கேது என்பது வாழ்க்கை. கேது என்பது உண்மை. அதாவது ஒரு அலுவலக ஆவணத்தை படிக்கும் பொழுது புதன் முக்கியமாக படுகிறது.அதுவே எழுத்தாளுடைய கதையை படிக்கும் பொழுது கேது தான் முக்கியம்.
எழுத்து – புதன் ( + சுக்கிரன் )
எழுத்தாளன் – புதன் + கேது (+ சுக்கிரன்)
Version 3 :
அடுத்த கட்டமாக ஆராயும் பொழுது , எழுத்தாளன் உண்மையை கடத்தவேண்டுமே தவிர.. உண்மை எழுதப்பட்டிருக்க வேண்டிய எந்த அவசியமும் கூட இல்லை. Reading between lines என்று கூறுவார்கள் இல்லையா? அதே தான்.
அர்த்தம் எழுத்தாளனின் எழுத்தில் புதனை தேடாதே கேதுவை தேடு என்று அர்த்தம்.அதாவது வாழ்க்கையின் உண்மையை தேடு. அதனால் இங்கு புதனும் சுக்கிரனுமே option ஆகிவிடும்.
எழுத்து – புதன் ( + சுக்கிரன் )
எழுத்தாளன் – கேது (+புதன் ) ( + சுக்கிரன் )
நீங்கள் ஆகச்சிறந்த எழுத்தாளர் ஆவதை உங்கள் வாழ்வு அனுபவம் தான் தீர்மாணிக்கும். எழுத்தறிவு கூடுதல் பலம் மட்டுமே. எழுத்தின் சுக்கிரனின் நிலை தான் எழுத்தாளனுக்கு புதன். அதாவது ஒன்றை பயன்படுத்தி வேறொன்றை கடத்துகிறோம்.
Conclusion :
எழுத்தாளுனுடைய மதிப்பு அழகாக எழுதுவதில் இல்லை. எவ்வளவு கலைச்சொற்கள் பயன்படுத்துகிறான் என்பதில் இல்லை.என்ன உண்மையை கடத்துகிறான் என்பதிலேயே பொதிந்திருக்கிறது.ஒரு எழுத்தாளன் எழுத்தோடு நின்றுவிடக்கூடாது.
கேள்வி :
ஒரு சிறந்த திரைப்பட இயக்குநருக்கு என்ன formula ( Version 3 ) வரவேண்டும்?