இதை பெண் ஆண் என்ற இடத்தில் இருந்தே புரிந்துகொள்ள வேண்டும். அதாவது பெண் ஏன் எதையும் நேரடியாக பேசவில்லை. ஆண் ஏன் ஏதையும் புரிந்துகொள்வதில்லை.பெண்கள்ல ஒரு சாரர் ஆண் மாதிரியே நேரடியா பேசுவாங்க. அது 10% தான். மற்ற 90% பேர் நேரடியா ஒரு விஷயத்தை சொல்லமாட்டாங்க. நாம தான் புரிஞ்சி நடந்துக்கனும்னு ஆசைப்படுவாங்க.
எப்பவுமே time science ல ஆண் பெண்ணு வித்யாசப்படுத்துவது கிடையாது. அடிப்படையில இந்த குணமும் இருவருக்கும் பொருந்தும் தான். ஆனா பெண்களுக்கு சற்று அதிகமா..
♦️இதுக்குறிய கிரகம் – சந்திரன்.
✳️ நீங்கள் ஆணாக இருந்தாலும் சந்திரன் ஆதிக்கம் உள்ளவரா இருந்தா, அதவாது ரொம்ப உணர்ச்சிவசப்படக்கூடிய மனிதரா இருந்தா ,இந்த உணர்வு உங்களுக்கு நல்லா புரியும்.நாம கேக்காமா நமக்கு என்ன வேணும்னு சரியா யோசிச்சு பண்றவங்கள தான் நமக்கு பிடிக்கும். அப்படி செய்யல பயங்கரமா வேதனை அடைவோம்.அதிகபட்சம் ஒரு முறை கேட்போம். அப்பவும் செய்யலைன்னா அவ்ளோதான். முழுமையான விரக்திதான் மிஞ்சும். இந்த குணம் உடல் ரீதியாகவே பெண்களுக்கு அதிகம்
✳️ பிறக்கும் பொழுதே உடல் ரீதியாக ஆண்களுக்கு – எலும்பு பலம் அதிகம். பெண்களுக்கு குறைவு. அதாவது ஆணுக்கு உடல் ரீதியாக சூரியன் பலம் அதிகம். பெண்ணுக்கு உடல் ரீதியாக சந்திரன் பலம் அதிகம்.
✳️ அதாவது ஒரு ஆண் எந்த நேரத்தில் பிறந்ததிருந்தாலும் அவன் முழு சந்திரன் பலத்தோடு பிறந்திருந்தாலும் கூட அவனால் குறைந்த பட்சம் குடும்பத்தை சுமக்க இயலும்.சுமக்க வேண்டும்.அதை தான் இந்த சமூகமும் விரும்பும்.
✳️ ஒரு பெண் தான் பிறந்த நேரத்தின் படி முழு சூரியனாக பிறந்தாலும் கூட , அவளுக்கு அன்பு பாசம் என்ற சந்திரன்களின் குணம் கொஞ்சமாவது இருக்கும். இருக்க வேண்டும்.அதை தான் இந்த சமூகமும் விரும்பும்.
♦️ஆனால் உண்மை என்ன?
✳️ பொறுப்புள்ளவர் ( சூரியன் பலம் ) ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ரொம்ப உணர்ச்சிவசப்படமாட்டாங்க. அதுவே பாசமுள்ளவர் ( சந்திரன் பலம் ) ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலைமைப்பண்பு இருக்காது. [ இரண்டுமே உள்ளவர்கள் உண்டு. அவர்கள் exception. அதை பற்றி தனியாக பார்க்கலாம் ]
✳️ மேலும் ஒரு பெண் எதையும் நேரா சொல்லனும் ஏங்குற அதே ஆண்கள் தான் அந்த பெண்ணுக்கு பாசம் நேசம் இருக்க வேண்டும் ஆசைப்படறாங்க. அதே மாதிரி தான் எதுவும் சொல்லாமலே புரிந்துகொள்ள வேண்டும்னு ஆசைபட்ற பெண்தான் தன் கணவன் பொறுப்போடு இருக்க வேண்டும்னு தன்னுடைய அனைத்து முயற்சியிலையும் support பண்ணனும்னு ஆசைப்படறாங்க.
அதாவது ஒரே கிரக்கத்துடைய இரண்டு குணத்துல ஒன்னு வேணும் இன்னொன்னு வேணாம்னு நினைக்கிறோம். இது தான் நாம் காலம் காலமா ஆடும் விளையாட்டு. இந்த சமமிண்மை கலந்த சமச்சீர்ல ( symmetry ) தான் உலகம் இயங்கிட்டிருக்கு.
***
♦️ பெண்கள் நேரடியாக பேசுவதை இந்த சமூகம் விரும்புவதில்லையே ?
இப்ப ஒரு பெண் சூரியன் பலத்தோட பிறந்திருக்கா. leadership quality இருக்கு. அவ எதையும் நேரடியாக கேக்கனும் பேசணும்னு நெனப்பா. ஆனா அதை இந்த ஆண் ஆதிக்க சமூகம் பேச விடாது. அப்ப அவளுக்கு கோபம் வருது.
ஏன் பெண்ணை பேச விடுவதில்லைங்கிற இடத்துல இருந்து தான் பெண்ணியம் தொடங்குது.
****
♦️ நான் காதலித்து திருமணம் செய்தவள்.என்னை ஏன் என் கணவர் புரிந்து கொள்வதில்லை? – கேள்வி
பெரும்பாலும் நீங்கள் சந்திரனாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர் சூரியனாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
திருமணத்தில் ஒரு சந்திரன் பெண் சூரியன் பையனை திருமணம் செய்யும் பொழுது பிரச்சனைகள் வரவே செய்யும். அந்த பெண்ணுக்கு தேவையானதை அந்த பையனால் செய்ய முடியும். ஆனால் அவளை அவளது உணர்ச்சிகளை ஒரு நாளும் புரிந்துகொள்ள முடியாது.
✳️ அவளுக்கு அவனுக்கு தேவையான பாசத்தை அவளால் கொடுக்க முடியும். ஆனால் அவளால் எதையும் நேரடியாக கேட்க முடியாது.
இதனால் தான் பல காதல் திருமணங்கள் தோல்வி அடைகின்றன. இதை தான் இரண்டு ஆண்டுகளாய் திரும்ப திரும்ப கூறுகிறேன்.
✳️ பெண்களே உங்கள் மீது அக்கறை கொள்பவரை காதலிக்காதீர்கள். உங்களை போல உணர்ச்சிகள் உள்ளவரை காதலியுங்கள் என்று. எவ்வளவு எழுதினாலும் மக்களுக்கு புரிதல் ஏற்படுத்துவது மிகமிகக் கடினமாக உள்ளது.
திருமணம் செய்தாயிற்று.வேற வழியில்லையா என்று கேட்டால். நீங்கள் தான் ஒவ்வொன்றும் அவருக்கு எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும். அல்லது மனநலமருத்துவரிடமோ time science consultation வந்தால் இருவருக்குமான புரிதலை கண்டிப்பாக ஏற்படுத்தலாம்.
****